Online Live Girls

Thursday, June 17, 2010

தமிழை வளர்ப்பது எப்படி?

'தமிழ்'ங்கிற வார்த்தையை 'டமில்'னு பேசுறது தான் இப்போதைக்கு பேஷன்.அதுலேயும் டிவியிலேயும்,எப்.எம் ரேடியோவிலேயும் பேசுற தமிழ் இருக்கு பாருங்க...அப்பப்பா அத பேசுறவன விட அத கேக்குறவங்கதான் முதல்ல சூசைட் பண்ண முயற்சிப்பாங்க...

தமிழ் மொழியை காப்போம்,தமிழர்களின் உரிமையை காப்போம் என்றெல்லாம் தமிழ்தமிழ்னு பேசி நான் தான் தமிழ் மொழிக்கும்,தமிழ் இனத்துக்கு தலிவரு'ன்னு தனக்கு தானே ஒரு பட்டத்த குடுத்துக்கிட்டு தான் ஊட்டு புள்ளைகளை எல்லாம் பாரீனுக்கு அனுப்பி இங்கிலீஷ் படிக்க வெச்சிட்டு ஊராம்புள்ளைக்கி மட்டும் தமிழ் அறிவை வளர்த்து உடுறதும் ஒருவித புது பார்முலா...

சரி மேட்டருக்கு வருவோம்

இப்படி எங்க பாத்தாலும் தமிழ்மொழியை கொலையா கொன்னு அத முழுசா அழிக்கிறதுக்கு ஒரு பெருக்கூட்டமே கங்கணம் கெட்டி திரிஞ்சிகிட்டு இருக்காங்க..

அவிங்ககிட்ட இருந்து நம்ம தாய்மொழி தமிழை பாதுகாத்து அத வளர்க்குறதுக்கு இங்கே சில யோசனைகள்...

* முதல்ல "தமிழ்மொழியை காப்போம்,தமிழர்களின் உரிமையை காப்போம்"னு ஒரு சூப்பரான பன்ச் டயலாக் ரெடி பண்ணி அத எங்கெல்லாம் கூட்டம் நடக்குதோ அங்கெல்லாம் மட்டும் பேசி தமிழை வளர்க்கலாம்.

* தமிழை வளர்க்குறதுன்னா அதுக்குன்னு ஒரு தலிவரு வேணும் அதனால தான் ஊட்டு புள்ளைங்க,சொக்கார புள்ளைங்க இவங்களையெல்லாம் பாரீனுக்கு அனுப்பி படிக்க வெச்சிட்டு மத்தவங்க எல்லாம் தமிழை படிங்கன்னு சொல்ற ஒருத்தரை தலைவரா போடலாம்.

* அக்கம்,பக்கத்துல உள்ள நாட்டுக்காரங்க அங்க வாழுற தமிழர்களை கொடுமை பண்ணினா அதை கண்டிச்சி இங்க போராட்டம் பண்ணுற தமிழர்களை பொசுக்குன்னு புடிச்சி ஜெயில்ல போட்டுறனும்.,அப்புறம் அவங்க வெளியில வந்து ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சி தமிழை மட்டுமில்லாம தமிழர்களையும் சேர்த்து வளர்ப்பாங்க.எதிர்காலத்துல அது அரசியல் கட்சியாவும் நிமிர்ந்து நிக்கும்,அது மூலமாவும் தமிழை வளர்க்கலாம்.

* சும்மா வெட்டியா இருக்குற கடைங்களோட பேர்களை தமிழ்ல வைங்க..!ன்னு சொல்றதுக்கு பதிலா தமிழர்கள் வீட்ட விட அதிக நேரம் விழுந்து கெடக்குற டாஸ்மாக் கடைகள்ல உள்ள சரக்குகள் எல்லாத்துலேயும் ஒட்டியிருக்குற லேபிளை தமிழ்ல அச்சடிச்சி ஒட்டி அது மூலமா தமிழ் தள்ளாடி,தள்ளாடி வளர நாம முயற்சிக்கலாம்.

* படத்தோட பேரு மட்டுமில்லாம சினிமா உலகத்துல இருக்குற எல்லாரோட பேரையும் தமிழ்ல வெக்க சொல்லலாம்.

* நடன நிகழ்ச்சியில குரூப்டான்ஸ் ஆட தமிழ் தெரியாதவங்களை வெளி மாநிலத்துல இருந்து வர வெச்சிட்டு,நிகழ்ச்சியோட பேர மட்டும் தமிழ்ல வெச்சி இசையோட தமிழை வளர்க்கலாம்.

* வாரத்துல ரெண்டு நாள் ஆங்கிலப்படத்தை போட்டு கீழே 'சப்-டைட்டில்' களை தமிழ்ல போடலாம்.

* வெளிநாட்டுல இருந்து இங்க தொழில் செய்ய வர்றவங்களை அய்யா...நீங்க கண்டிப்பா தமிழ் கத்துக்கணும்னு அவிங்க கால புடிச்சி கெஞ்சலாம்.அப்படியும் அவிங்க கேக்கலைனா தமிழை கத்துக்கிட்டா உங்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் தருவோம்னு சொல்லலாம்.

இப்படியெல்லாம் தமிழை வளர்க்க முடியலன்னா மக்களோட வரிப்பணத்த எடுத்து கோடிக்கணக்குல செலவு பண்ணி மாசத்துக்கு ஒரு செந்தமிழ் வளர்ப்போம் மாநாடு நடத்தலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

இணையதளத்தில் வேலை

Work from Home/Online Job: Easy Online Part time jobs. Just spend 1-2 hours/day and Earn Min Rs.35,000/Month. Google Adsense Jobs Powered By TOP Online MNC Company Google.Com. Just Copy Paste Work Only. Sample Job ID Blog: www.chennaionlinejobs.in . If you need Google Adsense Publisher Job ID Blog site? Cost Rs.1000 Only. Contact Me...me@manibharathi.com Mobile:91-09380083338 Tamil Nadu & Whole India. ///// Google Adsense Approval Tricks! Contact Me.////

தமிழ் நடிகைகள் படங்கள்

 

என்னைப் பத்தி ஹி...

My photo
சென்னை, தமிழ்நாடு, India
என்னை பத்தி நானே என்னன்னு சொல்றது??? நீங்க தான் சொல்லணும் நம்ம அருமை பெருமையெல்லாம்!!!

இணைப்பில் இருக்கும் நபர்கள்




பிடித்ததில் படித்து !!!

ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

EllameyTamil.Com Copyright © 2010 Designed by Manibharathi Powered by Hosting Palace