மாணவனின் தற்கொலைக் கவிதை
60 அடி உயர மரத்தில் பிணமாக தொங்கிய மாணவனின் இறுதித் தற்கொலைக் கவிதை கடிதம்.
அன்பு தமிழன்
உலக இனத்தில் தமிழ் இனம்
தலை சிறந்த இனமாகும்
உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன்
அடிமைபட்டுக் கிடப்பதா ?
பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்
முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் ம்றந்தாலும்
நாம் மறக்ககூடாது.
நிழல் தரும் மரம்
வீடுதோறும் மரம் வளர்ப்போம்.
இல்லையென்றால் ,
குடிநீர் விற்பனையாவது போல
காற்றும் வியாபரம் ஆகிவிடும்.
மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன்.
எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள்
வாழ்த்தி வழியனுப்புங்கள்.
உடல் உறுப்புகள் தானம்
தயவு செய்து எனது உடல் உறுப்புகளை
தானம் கொடுத்துவிடுங்கள்.
பிறந்த பூமியில் என்னை தவழவிடுங்கள்.
அசையாத புகைப்படமாக இருப்பதைவிட
அசைந்தாடும் மரம் ஆக நான் எழுவேன்.
நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நிழல்கொடு.
தமிழே உனக்கு தெரியாமல் உன்னை - நான்
நேசிக்கிறேன்.
இவன்,
ந.சசிகுமார் (வயது-26 )
மதுரை - விளாங்குடி
சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி(ஒவியக்கல்லூரி) மாணவர்.









0 கருத்துகள்:
Post a Comment