நகரி, ஜூன்.21-
அமெரிக்காவில் உள்ள டெட்ராய்டு பகுதியை சேர்ந்தவர் சாரா. இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வருகிறார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏழுர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிவர்மா. இருவரும் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நட்பு ஏற்பட்டது. நாளாக நாளாக இது காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது ரவிவர்மா பெற்றோர் இந்து முறைப்படி திருப்பதி கோவிலில் திருமணம் நடத்த வேண்டும் என்று கூறினர். இதற்கு சாரா ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து இருவருக்கும் நேற்று திருப்பதியில் திருமணம் நடந்தது. பின்னர் இருவீட்டாரும் சாமிதரிசனம் செய்தனர்.
இதையடுத்து இருவருக்கும் நேற்று திருப்பதியில் திருமணம் நடந்தது. பின்னர் இருவீட்டாரும் சாமிதரிசனம் செய்தனர்.
ரவிவர்மா கூறும்போது, சாரா மிகவும் புத்திசாலி. அவர் கிறிஸ்தவராக இருந்தாலும் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார். காதலுக்கு மதம், இனம், மொழி தடையில்லை என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment