அமிர்தசரஸ், ஜூன். 21-
பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ்சை சேர்ந்த இளம்பெண் சரப்ஜித் கவுர் (வயது 27). இவரை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். அப்போது சரப்ஜித் கவுர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் சரப்ஜித் கவுர்தற்கொலை செய்யவில்லை. அவரை போலீசார் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று புகார் கூறினார்கள். இதனால் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment