அமைச்சர் பூங்கோதை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வருகிற 23 ந் தேதி முதல் 27 ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி 3 நாட்கள் உலக தமிழ் இணைய மாநாடு, உத்தமம் அமைப்புடன் இணைந்து நடைபெற உள்ளது. இளைய தலை முறையினரிடையே தமிழ் இணைய ஈடுபாட்டை வளர்த்திடவும் பொதுமக்களிடையே தமிழ் இணைய வளர்ச்சியையும், பயன்பாடுகளையும் விளக்குவதற்காகவும் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கணினிவழி போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் அனைத்து பள்ளிகளில் இருந்தும் 8 ஆயிரத்து 300 மாணவர்கள் பங்கு பெற்றனர். இப்போட்டிகளில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மொத்தம் 21 மாணவ மாணவியர்கள் வெற்றிபெற்றுள்ளனர். மாவட்ட அளவில் மொத்தம் 189 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான தனி நபர் போட்டியில் செங்கல்பட்டை சேர்ந்த நந்தகுமாரும் என்ற மாணவருக்கு முதல் இடமும், குழுவினருக்கான போட்டியில் மணிகண்டன், பால சுப்பிரமணியன் ஆகியோர் முதல் இடமும் பெற்றுள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் வடிவமைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இணையதளத்தில் நடந்த இந்த போட்டிகளில் சுமார் 1200 தமிழ் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. விக்கிப்பீடியாவை பல பிரிவுகளாக பிரித்து போட்டியை நடத்தினோம். போட்டியில் இடம் பெற்ற கட்டுரைகளில் மாநில அளவில் 9 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கலை கலாசார பிரிவில் சென்னை மாணவன் யோகேஷ் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவர்களுக்கான முதல் பரிசு ரூ.7,500 ம், விக்கிப்பீடியா போட்டியில் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் பரிசு பெற்றவர்களுக்கு 27 ந் தேதி காலை கோவையில் நடைபெறும் மாநாட்டில் வழங்கப்படும். இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் என்பது மகிழ்ச்சிக்குறியதாகும் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment