2009 சிவில் பணிகள் தேர்வில் டாக்டர் ஷாபேசல் முதலிடம் பெற்றுள்ளார். இவர் ஸ்ரீநகரில் மருத்துவப் பட்டம் பெற்றவர். முதல் முயற்சியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். தில்லியைச் சேர்ந்த பொறியாளர் திரு. பிரகாஷ் ராஜ் புரோஹித் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இது இவரது இரண்டாவது முயற்சியாகும்.
பெண்களில் தில்லியைச் சேர்ந்த செல்வி இவா சகாய் முதலிடம் பெற்றுள்ளார். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கு இது முதல் முயற்சியாகும். முதலிடம் பெற்ற 25 பேரில் 10 பேர் பெண்களாவர். முதல் 25 இடம் பெற்றவர்களில் 15 பேர் தில்லியைச் சேர்ந்த வர்கள். சென்னை, மும்பை மற்றும் திருவனந் தபுரத்தில் இருந்து தலா இரண்டு பேரும், அலகாபாத், சண்டிகர், கட்டாக் மற்றும் ஐதராபாத்தில் இருந்து தலா ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் பணிகளுக்கான நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்த வர்கள். இவர்களில் ஐந்து பேர் பார்வை யற்றவர்களாவர்.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 127 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இத்தேர்வுக்கு சிலர் தனியாகவும், பலர் பயிற்சி மையங்களிலும் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளனர். அதுவும் பெரும்பான்மை யான மாணவர்கள் பல பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வெற்றிப் பெற்றுள்ள னர். அதனால்தான் அனைத்து பயிற்சி மையங்களும் வெற்றியாளர்களை உரிமை கொண்டாடி வருகின்றன. இவற்றில் மிகச் சிறந்த பயிற்சி மையமாக அனைத்து வெற்றி யாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது தமிழக அரசின் அண்ணா மேனேஜ்மெண்ட் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்.. இதில் தரப்படும் சிறந்த பயிற்சி, தமிழகத்தில் உள்ள பிரபல மான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே நேரில் வந்து பயிற்சி தருவது, இலவச தங்கும் இடம், டெல்லி செல்ல இலவச பயணம் என பல ஆண்டுகாலமாக "சிவில் சர்வீசஸ்' வெற்றி யாளர்களை உருவாக்கி வருகிறது. சில கட்டண பயிற்சி மையங்கள் இருப்பினும் அவற்றை நன்கு விசாரித்து சேர்ந்து பயிற்சி பெறுவது முக்கியம். அதே போல இத் தேர்வுக்கு தயார் செய்யும்போது எதை படிக்க வேண்டும், எதை படிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முந்தைய வினாத்தாள்கள் அடிப்படையில் பாடங் களை தெரிவு செய்து படிப்பது, தொடர்ந்து மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்ப்பது, குழுவாக படிப்பது, விவாதிப்பது போன்றவை இத்தேர்வில் வெற்றிபெற எளிய வழியாகும். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு சிலபஸ் அதிகம். படிக்கவேண்டிய நூல்கள் அதிகம். அவ்வளவு தான். ஆனால் அவற்றை சரியாக திட்டமிட்டு படித்தால் சுலபமாக வெல்லலாம்.
-------------------------------------------------------------
ராணி காஞ்சனா
இவ்வாண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 434-வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கும் ஆர். ராணி காஞ்சனா அவர்கள் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.
வணக்கம். தாங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்கு பொது அறிவு உலகம் இதழ் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி சார்.
இந்த வெற்றியை எப்படி உணருகிறீர்கள்?
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கஷ்டப்பட்டது வீண் போகலை. என்னைப் படிக்க வைத்த எனது பெற்றோர்களுக்கும், திருமணமான பின்பு நீ ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமென என்னை ஊக்குவித்து, படிக்க வைத்த எனது கணவர் ஜெயக்குமாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுருக்கமாக சொல்லப்போனால் எனது கணவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன்.
உங்கள் குடும்பம், படிப்பு பற்றி கூறுங்கள்...
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை எனது ஊர். கணவர் விவசாயி. எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. நான் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எம்.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்தேன். பிறகு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதினேன்.
இரண்டுமுறை பிரீலிமனரி தேர்வில்கூட தேர்ச்சி பெறமுடியவில்லை. பிறகு மூன்றாவது முறை முயற்சி செய்து இன்டர்வியூ வரை சென்றேன். பிறகு நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன்.
என்னென்ன விருப்பப்பாடங்களை தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் பிரீலிமனரியில் புவியியல் விருப்பப் பாடத்தையும், மெயின் தேர்வில் புவியியல் மற்றும் தமிழ் இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்தேன்.
தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?
பொது அறிவு, புவியியல் பாடத்திற்கு என்.சி.ஆர்.டி. புத்தகங்களை படித்தேன். அதையே மெயின் தேர்வுக்கும் படித்தேன். தினமும் பயிற்சி வகுப்புகள் உட்பட 10 மணிநேரம் படிப்பேன். மேலும் நண்பர் களுடன் குழுவிவாதம் செய்தது மிகவும் உதவியாக இருந்தது. மாறி மாறி கேள்விகள் கேட்பது, படிக்க கேட்பது என குழு விவாதம் சிறப்பாக இருந்தது. இதனால் நான் தயார் செய்வதும் மிகவும் எளிமையாக இருந்தது. எவ்வளவு நேரம் படிப்பது என்பதைவிட எவ்வளவு ஆழமாகவும் உன்னிப்பாகவும் படிப்பது என்பதே இங்கு முக்கியம். அனைத்துப் பாடங்களையும் நோட்ஸ் எடுத்து படித்தேன். அடிக்கடி குழந்தையை பார்க்க ஊருக்கு செல்ல வேண்டியதாக வரும். அதன் இடையேயும் தொடர்ந்து படித்தேன்.
விருப்பப்பாடங்களுக்கு என்னென்ன புத்தகங் களை படித்தீர்கள்?
எனது புவியியல் விருப்பப்பாடத்திற்குக்கூட என்.சி.ஆர்.டிதான் மெயின் வரை படித்தேன். அதுவே 40 சதவிகிதம் இத்தேர்வுக்கு உதவியாக இருந்தது. அதை அடுத்து Physical geographydÏ Savindra singh, Human geography மற்றும் Indian geographyக்கு மஜித் உசேன் போன்ற நூல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
ஏதேனும் பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா?
ஆமாம். முதலில் தனியாக படித்தேன். சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி, மனிதநேயம், பின்பு ஸ்டேடர்ஜி அகாடமியில் படித்தேன். தேவி இராஜேந்திரன் ஐயா தமிழ் இலக்கியத்தை அருமையாக சொல்லிக் கொடுத்தார். நான் தமிழ் இலக்கியத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு அவர்தான் காரணம்.
ஏன் இத்தனை பயிற்சி மையங்களில் படித்தீர்கள்?
தமிழகத்தில் அனைத்து முக்கிய விருப்பப் பாடங்களுக்கும் சிறந்த பயிற்சி வழங்கும் பயிற்சி மையம் இல்லை. ஒவ்வொரு மையமும் ஏதேனும் ஒரு பாடத்தைத்தான் சிறப்பாக கற்றுத் தருகிறது. அண்ணா மேனேஜ் மெண்ட் அரசின் இலவச பயிற்சி மையம் சிறப் பாக கற்றுத் தருகிறது. அங்கு படிக்கும் சூழலும் மிக அருமையாக உள்ளது. அவர்களே உணவு, இருப்பிடம் கொடுத்து அனைத்துவித உதவியும் செய்கின்றனர்.
சிவில் சர்வீசஸ் தேர்வு தயார் செய்வோருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஒஆந, ஒடந தேர்வு மிக மிக கடினம் என்பது பொய். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் நடத்தும் அனைத்து தேர்வுகளைவிட மிகவும் எளிமையானது இந்த சிவில் சர்வீசஸ் தேர்வுதான். பாடங்களில் எதை படிக்க வேண்டும், எதை படிக்கக்கூடாது என்பதை புரிந்து கொண்டு, நன்கு தயார் செய்தால் வெற்றி பெறலாம். மக்களுக்கு நிறைய நல்லது செய்யலாம்.
நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?
நாம் மெயின் தேர்வுக்கு அனுப்பும் விண்ணப்பத்தினை எடுத்து வைத்துக் கொண்டு அதன் அடிப்படையிலேயே கேள்விகளைக் கேட்கின்றனர். என்னிடம் பொள்ளாச்சி, கோவை மாவட்டத்தை பற்றியும், நான் படித்த மைக்ரோ பயாலஜி பாடத்திலிருந்தும், விவசாய குடும்பம் என்பதால் அதனை பற்றியும் கேட்டனர். மிகவும் இயல்பாகவும் நுட்ப மாகவும் கேட்டதனால் எளிதாக பதில் தந்தேன்.
"பொது அறிவு உலகம்' இதழ் பற்றி?
நல்ல மாத இதழ். டி.என்.பி.எஸ்.சிக்கு மிகவும் சிறந்த நூல். ஒஆந தேர்வு பாடங்களையும் கொஞ்சம் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
-----------------------------------------------------------------
டாக்டர் பிருந்தா
டாக்டர் பிருந்தா முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி வெற்றிப் பெற்றுள்ளார். பொது அறிவு உலகம் இதழுக்காக அவர் அளித்துள்ள பேட்டி.
உங்கள் குடும்பத்தைப் பற்றி கூறுங்கள்...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எனது சொந்த ஊர். அப்பா தேவராஜ் காலமாகிவிட்டார். அம்மா தெய்வானை. அண்ணன் சங்கர். சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் டைரக்டர்.
படித்தது?
நான் ஊத்தங்கரை வித்யாமந்திர் பள்ளியில் 10-வது வரை படித்தேன். பிறகு 12-வது வரை ராசிபுரம் எஸ்.ஆர்.வி.யில் படித்தேன். பின்பு திருச்சியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தேன். படித்த பின்பு மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவக்கல்லூரியில் டாக்டராக பணிபுரிந்தேன்.
டாக்டராக இருந்த உங்களுக்கு ஒஆந தேர்வு எழுத வேண்டுமென எப்படி தோன்றியது?
நான் எனது அண்ணாரின் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் வந்து உட்கார்ந்திருப்பேன். அப்போது அங்கு படிக்கும் மாணவர்களை பார்க்கும்போது நாமும் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதினால் என்ன என தோன்றியது. அதனால் முதல் முறையாக முயற்சி செய்தேன். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றேன்.
என்னென்ன விருப்பப்பாடங்களை தேர்ந்தெடுத்தீர்கள்?
பிரீலிமனரிக்கு புவியியல் பாடத்தையும், மெயின் தேர்வுக்கு புவியியல் மற்றும் விலங்கியல் பாடத்தையும் தேர்ந்தெடுத்தேன்.
இரண்டு விருப்பப்பாடங்களும் அதிக பாடப் பிரிவுகளை கொண்டது. அப்படி இருக்கையில் எப்படி படித்தீர்கள்?
உண்மைதான். புவியியலுக்கு சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் வகுப்பெடுத்த ஆசிரியர் கள் நன்றாக பாடம் எடுத்தார்கள். விலங் கியலுக்கு மட்டும் எனது அண்ணன் முயற்சி செய்து ஸ்டடி மெட்டீரியல் தயார் செய்து கொடுத்தார். இவை இரண்டும் ஆழமாக படித்தேன்.
நேர்முகத்தேர்வு எப்படி இருந்தது?
நான் டாக்டர் என்பதால் மருத்துவம் பற்றியே அதிக கேள்விகள் கேட்டனர். நாட்டில் தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. அரசு மருத்துவமனைகளும் உள்ளன. எங்கு எப்படி மருத்துவம் செய்கிறார்கள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரம், மருத்துவ வசதி எப்படியுள்ளது என கேட்டனர். முக்கியமாக சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதன் அவசியம் ஆகியவற்றை பற்றி கேட்டனர்.
எப்படி இந்த தேர்வுக்கு பயிற்சி செய்தீர்கள்?
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில்தான் முழுமை யாக படித்தேன். இங்கு எந்த பாடங்களில் எவற்றை முக்கியமாக படிக்க வேண்டும். எவற்றை படிக்க வேண்டாம் என்பதை தெளிவாக கூறி அதற்கு தகுந்தாற் போல் பயிற்சி கொடுத்தனர். நிறைய மாதிரித் தேர்வுகள், மாதிரி இன்டர்வியூ நடத்தியது வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது. நல்ல வழிகாட்டுதல் இருந்தால்தான் எளிதில் வெற்றி பெற முடியும். அந்தவகையில் சிறந்த பயிற்சியை பெற்றேன். இதற்கு எனது அண்ணார் சங்கர் மற்றும் எனக்கு பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த தேர்வை பற்றி பயப்படத் தேவையில்லை. முதல் முயற்சியிலே வெல்ல லாம். இல்லையெனில் அடுத்தடுத்த முயற்சி களிலும் வெல்ல முடியும். முதலில் நம்பிக்கை இழக்காமல் படிக்க வேண்டும். நல்ல வழிகாட்டுதலுடன் படித்தால், இத்தேர்வை எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.
----------------------------------------------------------------
நிவாஸ்
நிவாஸ்
சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 45-வது ரேங்க் பெற்று தேர்வில் வெற்றிப் பெற்றவர் நிவாஸ். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை 2007-ல் எழுதி தற்சமயம் வண்டலூரில் டி.எஸ்.பி. டிரெயினிங்கில் உள்ளவர் பொது அறிவு உலகத்திற்கு பேட்டியளித்தார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்கு பொது அறிவு உலகம் இதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம். இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். ரொம்பவும் அருமையான மாத இதழ். டி.என்.பி.எஸ். சி. குரூப் 1 தேர்வை எழுதுவதற்கு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
உங்களின் குடும்பம், படிப்பு பற்றி சொல்லுங்கள்...
எனது பெற்றோர்கள் அரசாங்க வேலையில் உள்ளார்கள். மனைவி பபிதா எல் & டியில் பணிபுரிகிறார். இவர்கள் எல்லாம் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தியதால் மூன்று முறை முயற்சி செய்து இன்டர்வியூ வரை சென்றேன். ஆனால் இந்தமுறை படித்து வெற்றி பெற்றேன். மேற்படி பள்ளி படிப்பு காஞ்சி புரத்தில் படித்தேன். பிறகு வேலூர் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். தனியார் கம்பெனியில் பணி புரிந்தேன். பிறகு ஏற்கெனவே மூன்றுமுறை முயற்சி செய்து விட்டதால் நான்காவது முறை நன்றாக படிக்க வேண்டுமென வேலையை ராஜினாமா செய்து விட்டு படித்தேன். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிப் பெற்றேன். இப்போது சிவில் சர்வீசஸ் தேர்விலும் வெற்றிப் பெற்றுள்ளேன்.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு எப்போது தயார் செய்ய ஆரம்பித்தீர்கள்?
இந்த தேர்வை முதல்முறை எழுதி பிரீலிமனரி தேர்விலேயே தோல்வியடைந்தேன். அதன்பின் இரண்டுமுறை எழுதி இன்டர்வியூ வரை சென்றேன். பணிவாய்ப்பு கிடைக்க வில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் நான்காவது முறையாக எழுதி இந்தமுறை வெற்றி பெற்றேன்.
தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?
நான் விருப்பப்பாடமாக புவியியலையும் தமிழ் இலக்கியத்தையும் எடுத்துப் படித்தேன். பள்ளியில் 11, 12-வது வகுப்பில் சமஸ்கிருதத்தை தான் படித்தேன். தமிழை படிக்கவில்லை. ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தமிழ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தமிழ் மொழிபோல் சிறப்பான மொழி எதுவுமில்லை. படிக்கவும், புரிந்துகொள்ளவும் மிக சிறந்த மொழி நம் தமிழ்தான்.
பயிற்சி வகுப்புக்கு சென்றீர்களா?
அண்ணா மேனேஜ்மெண்டில் தமிழ் பாடத்தை இளங்கோ ஐயா சிறந்த முறையில் கற்றுத் தந்தார். அதனால் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. புவியியல் பாடத்தை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்தேன். மனிதநேயமும் சென்றேன். அங்கு இன்டர்வியூ வகுப்பில் மட்டும் கலந்து கொண்டேன். முதன்முதலில் டெல்லியில் உள்ள வஜ்ரம்ரவி பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். தேர்ச்சி பெறவில்லை. பிறகு தனியாக படித்தேன். சில இடங்களில் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.
என்னதான் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தாலும் பெரும்பாலும் பயிற்சி மையங்கள் அதிகப்படியான பாடங்களை கொடுத்து மிரள வைத்துவிடுகின்றன. என்னை பொறுத்த வரையிலும் அவ்வளவு தேவையில்லை. தினமும் செய்தித்தாள்களை நன்றாக படித்து, விருப்பப் பாடங்களுக்கும், பொது அறிவுக்கு அடிப் படையான நூல்களை படித்து நோட்ஸ் எடுத்து மீண்டும் மீண்டும் படித்தாலே போது மானது. யு.பி.எஸ்.சி.யானது அன்றாட செய்திகள், தகவல்கள் அடிப்படையிலேயே கேள்விகளை கேட்பதால் அன்றைய செய்தி களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பொது அறிவு உலகம் இதழை தொடர்ந்து படித்து வருகிறீர்கள். அதைப்பற்றி கூறுங்கள்...
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தமிழில் சிறந்த இதழ் பொது அறிவு உலகம். அதேபோல பொது அறிவு உலகம் வெளியிடும் நக்கீரன் இயர்புக் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment