உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக உலகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கோவை நகரம் முழுவதும் விழா கோலமாக காட்சி அளிக்கிறது. மாநாட்டு அரங்கை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு வருகின்றனர். இதற்கிடையில் கோவை மாநாட்டில் பங்கேற்க இன்று முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்றுள்ளார்.
மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் தமிழரிஞர்கள் கோவைக்கு வந்துள்ளனர். மாநாட்டு செய்திகளை உடனுக்குடன் அனுப்ப பல்வேறு நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கோவையில் குவிந்தனர்.
இவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு உடனுக்குடன் செய்திகள், படங்கள், வீடியோ ஆகியவற்றை அனுப்ப, இணையதள இணைப்புகள், கம்யூட்டர்கள் போன்ற ஏற்பாடுகள் 12 ஆயிரம் சதுர அடியில் செய்யப்பட்டுள்ளன.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என தனித்தனியாக 700 கம்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment