காதலிக்கு கல்யாணம்
காதல் தோல்வி சோகக் கவிதை
சிரிக்க சிரிக்க பார்த்த முகம் - நெஞ்சில்
சிலையாக பதிந்த முகம்
கயல்கள் இரண்டை பூட்டிய முகம் - என்
நித்திரையை களைத்த முகம்
அவள் அன்பினிலே திங்கள் முகம் - உண்மையில்
இதையத்தில் மலர்ந்த பூ-முகம்
வண்டுகளை காணா சிவந்த முகம் - கண்
இமைக்குள் நிறைந்த வண்ண முகம்
பாரதி கண்ட புதுமை முகம் - வேண்டி
காத்திருந்த கன்னி முகம்
இன்று
இன்று
கண்ணீர் சிந்துகிறதோ !
வலையில் துடிக்கிறதோ !
மேடையில் கசங்குகிறதோ !
நாணம் மறைகிறதோ !
உதிரம் கொட்டுகிறதோ !
என் காதலிக்கு கல்யாணம் .
இப்படிக்கு
கள்வன் காதலன்.
Keywords Cloud : Love kaithai, Love Failure Kavithai, Love Poem, Non-Vetri Love Poem, Kathal Soga Kavithai, Tamil Love Failure Kavithai
0 கருத்துகள்:
Post a Comment