Online Live Girls

Showing posts with label தமிழ் கவிதைகள். Show all posts
Showing posts with label தமிழ் கவிதைகள். Show all posts

Sunday, June 27, 2010

Best Lines By a Lover Manibharathi

சிறந்த கவிதை எழுதியவர் காதலன் !!!

காதலன் காதலிடம் சொல்கிறான் மறுபடியும் என்னை பார்க்காதே!!! ஏனென்றால் எனிடம் வேறொரு இதயம் கிடையாது!!!


- மணிபாரதி 

Life (வாழ்கை) Gap Between Birth and Death

"வாழ்கை என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான ஒரு இடைவெளி"

அதனால் நம் இந்த இடைவெளியில் மிகவும் மகிழ்சியாகவும் மற்றும் பிறரை மகிழ்சியாகவும் வைப்போம்...!

ஆகையால் நாம் நம் இருக்கும் நொடி முழுக்கும் மகிழ்சியாக இருப்போம்...!

- மணிபாரதி 

Thursday, June 24, 2010

அறத்துப்பால் - பாயிரவியல் - கடவுள் வாழ்த்து ( Thirukural 1 - 10 )

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை:

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வ உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
Translation:

A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.
Explanation:

As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.
குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் உரை:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
மு.வ உரை:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
Translation:
No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.
Explanation:

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?.
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
கலைஞர் உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வ உரை:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

Translation:
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.
Explanation:
They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).
குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
மு.வ உரை:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
Translation:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.
Explanation:
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
கலைஞர் உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
மு.வ உரை:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
Translation:
The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well.
Explanation:

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
கலைஞர் உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
மு.வ உரை:

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
சாலமன் பாப்பையா உரை:

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.
Translation:
Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
Explanation:
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
கலைஞர் உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
மு.வ உரை:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
Translation:
Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.
Explanation:
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கலைஞர் உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
மு.வ உரை:

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
Translation:
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard
the further bank of being's changeful sea to attain.
Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that
gracious Being who is a sea of virtue.
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கலைஞர் உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
மு.வ உரை:

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
சாலமன் பாப்பையா உரை:

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
Translation:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.
Explanation:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
கலைஞர் உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மு.வ உரை:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
Translation:
They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach
the shore of being's mighty main.
Explanation:
None can swim the great sea of births but those who are united to the
feet of God
.

To Face New Life

உங்களுக்கு கிடைக்கும் வெற்றியில் பலரின் தோல்வி இருக்கும்.


உங்களுக்கு கிடைக்கும் தோல்வியில் யாரோ ஒருவற்கு வெற்றி இருக்கும் .


So don't feel for anything.

Wednesday, June 23, 2010

செம்மொழியா... செவ்வியல் மொழியா?: மணவை முஸ்தபா ( How The Name Semmozhi Came For Tamil )


தமிழை செம்மொழி என்பதா அல்லது செவ்வியல் மொழி என்று அழைப்பதா என்ற குழப்பம் சமீபகாலமாக நீடித்து வந்தது. சங்க இலக்கியம்,தொல்காப்பிய இலக்கணம் முதலாக மொழி ஞாயிறு பாவணர் வரை அனைவருமே தமிழை செம்மொழி என்றே அழைத்து வந்துள்ளனர். "செம்மையாய் அமைந்த மொழி' என்பது அதன் பொருளாகும்.
கிளாசிக்கல் எனும் ஆங்கில வார்த்தையை அப்படியே மொழி பெயர்க்கும் போது, செவ்வியல் என்று மொழி பெயர்க்கிறார்கள். கிளாசிக்கல் லிட்டரேச்சர் என்பதை செவ்வியல் இலக்கியம் என்று மொழி என்று மொழி பெயர்க்கலாம். ஆனால் செவ்வியல் மொழி என்றால் புதுவகை இயல் மொழி என்றே எண்ணத் தோன்றும். ஆனால் செம்மொழியில் உள்ள செம் என்பது செம்மை என்பதன் சுருக்கமாகும். செம்மையாய் அமைந்த மொழி என்று பொருள். இதனால்தான் கிளாசிக்கல் லாங்குவேஜ் என்பதை செம்மொழி என்று கூறுவதே பொருத்தம்.

தமிழ் வளர்த்த நூறு தமிழ் அறிஞர்கள் ( 100 Tamil Experts In Tamilnadu )

  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ரா.இளங்குமரனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ஞானசம்பந்தனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ராமநாதன் செட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சித்பவானந்தர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஏந்தல் மங்கலங்கிழார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சிவஞான பாலைய அடிகளார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்.. கா.பொ.ரத்தினம்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.வரதராசனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ..சி.இலக்குவனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... : அ.சிதம்பரநாதனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...தமிழ்க்கடல் ராய.செசாக்கலிங்கனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
  • மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால் பிள்ளை (1896 - 1985)
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதர் அருணகிரிநாதர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ந.சி.கந்தையாபிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...திரிசிரபுரம் ரா.பஞ்சநதம்பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்..பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் சொ.முருகப்பா
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ...பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சதாசிவப் பண்டாரத்தார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...பேராசிரியர் மயிலை சிவமுத்து
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சாமி சிதம்பரனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ... ஞா.தேவநேயப் பாவாணர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கி.ஆ.பெ.விசுவநாதனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...அண்ணாமலை செட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...கோவிந்தசாமி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...பாண்டித்துரைத் தேவர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கா. சுப்பிரமணியபிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வேங்கடசாமி நாட்டார்
  • தமிழ்வளர்த்த அறிஞர்கள்... உமாமகேசுவரன் பிள்ளை
  • செல்வ கேசவராய முதலியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தண்டபாணி தேசிகர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்..: தணிகை மணி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பா.வே.மாணிக்க நாயக்கர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பூரணலிங்கம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி ஞானப்பிரகாசர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்: மயிலை சீனி வேங்டசாமி
  • செம்மொழி தமிழ் அறிஞர்கள்-சுத்தானந்த பாரதியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாமிநாத சர்மா
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் கந்தையாபிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ...:சுவாமி விபுலானந்தர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆர்.கே.சண்முகம் செட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...பெ.நா.அப்புஸ்வாமி
  • தமிழ் வளர்த்த அறிஞர் பொ.திருகூட சுந்தரம் பிள்ளை
  • பாவேந்தர் பாரதிதாசன்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் : சுத்தானந்த பாரதியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் :பாபநாசம் சிவன்
  • அறிஞர் வ.ரா.,
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமலிங்கம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரு.வி.க.,
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகாகவி பாரதியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...வ.வே.சு. ஐயர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... நாவலர் சோமசுந்தர பாரதியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ... ராஜாஜி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாயுபு மரைக்காயர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.ராகவையங்கார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மறைமலை அடிகள்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தேசிக விநாயகம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பம்மல் சம்பந்த முதலியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.உ.சிதம்பரனார்
  • நா.கதிரைவேற்பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாம்பன் சுவாமிகள்
  • பரிதிமாற் கலைஞர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சங்கரதாஸ் சுவாமிகள்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உ.வே.சா.,
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறுமுக நாவலர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வீரமாமுனிவர்
  • அறிவோம்... வேதங்களிலும் தமிழ்
  • அறிவோம்... மாதவ சிவஞான முனிவர்
  • ஆய்வுக்கு 30 அரங்கம்
  • அறிவோம்... உயர்தனிச் செம்மொழி
  • அறிவோம்... அறிஞர் கால்டுவெல்

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி ? ( How The Tamil Will Got A Semmozhi )


கோவை : "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டுமென ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஒலித்து வந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்று போயிற்று. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபின், தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று தமிழ் செம்மொழியென அறிவிக்கப்பட்டது,'' என்று, கோவையில் துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

மாநாட்டுக்கு தலைமை வகித்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாக இம்மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். கோவையில் நடைபெறுகின்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமென தமிழர்கள் வந்துள்ளனர். கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதை பெருமையாகக் கருதுகிறேன். இதுவரை, "உலகத் தமிழ் மாநாடு' என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடந்துள்ளன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்போது நடக்கும் மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை, "உலகத் தமிழ் மாநாடுகள்'. இப்போது நடைபெறுவது, "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு'. உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில், உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை. தமிழ் உலகமொழி மட்டுமல்ல; உலகமொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், "ஞால முதல்மொழி தமிழே' என்று, நிறுவிக் காட்டியிருக்கிறார்.

மூலத் தாய்மொழிச் சொற்கள் உலகமொழிகளில் சொல்வடிவில் உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உலகமொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப்பெயர்கள்; நான், நீ, அவன் எனும் மூவிடப்பெயர்கள். நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கை பெயர்கள் போன்றவை, தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால், தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது. உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலை தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என, அறியலாம். கி.மு. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் சாலமனுக்கு, தமிழக கப்பல்கள் மயில் தோகையையும், யானை தந்தங்களையும், வாசனைப் பொருட்களையும் கொண்டு சென்றன. வடமொழியில், வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை, ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார். இதிலிருந்து, வடமொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை, அறியலாம். வால்மீகி ராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட முவேந்தர்களை பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது, லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக்கருதப்படுகிறது. கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மவுரியரின் அமைச்சரான சாணக்கியர், தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலை பற்றி குறிப்பிடுகின்றார். கி.மு. 350ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞர் காத்தியனார் சேர, சோழ, பாண்டியர்களை பற்றி குறிப்பிடுகிறார்.

பாரதப்போர் பற்றிய குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன் 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது, இரு பக்க படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன் - சேரன் பெருஞ்சோற்றுதியன், சேரலாதன் என்று அழைக்கப்பட்டார். பாரதப்போர் நடைபெற்ற காலம் கி.மு. 1500 எனப்படுகிறது. அப்படியானால், இந்த சேரனின் காலம் கி.மு. 1500 ஆக இருக்க வேண்டும். இவையனைத்தும் தமிழ் இனம், தமிழ் மொழியின் தொன்மையையும் புலப்படுத்துகின்றன. பேரறிஞர்களான ஜான்மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்ட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர், "திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள்' எனவும், அவர்களின் மொழி திராவிட மொழி தான் எனவும் உறுதிப்படுத்துகின்றனர். "சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு; திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்துவெளிக் குறியீடுகளை பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்' என்று, கடந்த 40 ஆண்டுகளாக சிந்துவெளி பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார். இன்று, "கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' பெறும் பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா, "சிந்துவெளி பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை' என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன் வைத்து, அத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிந்துவெளியினர் திராவிடமொழி பேசுபவர்களே, என்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் அவர் விரிவாக கூறியிருக்கிறார். அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்கள் தரை, கடல் வழியாக பயணம் செய்து உஜ்ஜயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்றும் வாணிகம் செய்தார்கள். தமிழக வாணிகர், அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்தார்கள். அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளை பேசிய மக்கள் தங்கியிருந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழ்நாட்டுக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேர நாட்டின் முசிறித்துறைமுகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகள் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாயிற்று. அதன் தொன்மை, தனித்தன்மை, முதன்மைச் சிறப்பினால் தமிழ், உலக முதல் தாய்மொழியாக, உலகத்தமிழாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மொழி, செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத் தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும். இந்த பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

தமிழ், செம்மொழியே என, முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர். தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல். அயர்லாந்து நாட்டில் "ஷெப்பர்ட்ஸ் காலனி' என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார். தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னை பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலை கழகங்களும் குரல் கொடுத்தன. தவிர, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், வா.செ. குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார்சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர். எனினும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்றுப் போயிற்று. ஆனால், சோனியாவின் வழிகாட்டுதலிலும், பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த பின்னர்தான், தமிழைச் செம்மொழியென பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடந்த 2004, அக்.,12ல் தமிழ் செம்மொழி பிரகடன அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

ஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல், குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்கு பிறகு, நடைபெறுகிற முதல் மாநாடு இது. இதனால்தான் தமிழின் பெயரால், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில், இந்த மாநாடு கோவை மாநகரில் நடைபெறுகிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ்மொழியை, எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்கவும்; இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும்; சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல்லூர் கொடுங்கல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிகளின் அடிப்படையில், மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அதன் காரணமாகவே, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படுகிறது. இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

மாணவனின் தற்கொலைக் கவிதை


மாணவனின் தற்கொலைக் கவிதை 

60 அடி உயர மரத்தில் பிணமாக தொங்கிய மாணவனின் இறுதித் தற்கொலைக் கவிதை கடிதம். 

அன்பு  தமிழன் 

உலக இனத்தில் தமிழ் இனம்
தலை சிறந்த இனமாகும்

உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன்
அடிமைபட்டுக் கிடப்பதா ?

பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் ம்றந்தாலும்
நாம் மறக்ககூடாது.

நிழல் தரும் மரம்

வீடுதோறும்  மரம் வளர்ப்போம்.
இல்லையென்றால் ,
குடிநீர் விற்பனையாவது போல
காற்றும் வியாபரம் ஆகிவிடும்.

மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன்.
எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள்
வாழ்த்தி வழியனுப்புங்கள்.

உடல் உறுப்புகள் தானம்

தயவு செய்து எனது உடல் உறுப்புகளை
தானம் கொடுத்துவிடுங்கள்.
பிறந்த பூமியில் என்னை தவழவிடுங்கள்.

அசையாத புகைப்படமாக இருப்பதைவிட
அசைந்தாடும் மரம் ஆக நான் எழுவேன்.

நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நிழல்கொடு.

தமிழே உனக்கு தெரியாமல் உன்னை - நான்
நேசிக்கிறேன்.

இவன்,
ந.சசிகுமார் (வயது-26 )
மதுரை - விளாங்குடி
சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி(ஒவியக்கல்லூரி) மாணவர்.

Image

Tuesday, June 22, 2010

தமிழ்ச் செம்மொழி பாடல், வரிகளுடன்...



[ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.]
 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறந்த பின்னர் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

உண்பது  நாழி   உடுப்பது  இரண்டே  

உறைவிடம்  என்பது  ஒன்றே  என,

உரைத்து  வாழ்ந்தோம்.  உழைத்து  வாழ்வோம்

தீதும்  நன்றும்  பிறர்  தர  வாரா  எனும்

நன்  மொழியே  நம்  பொன்  மொழியாம்  

போரைப் புறம்  தள்ளி  பொருளை  பொது  வாக்கவே  

அமைதி  வழி  காட்டும்  அன்பு  மொழி

அய்யன்  வள்ளுவரின்  வாய்  மொழியாம்

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பை  பகுத்து  கூறும் 
  
ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பைப்  பகுத்து  கூறும் 

ஒல்காப்  புகழ்த்  தொல்காப்பியமும்,  ஒப்பற்ற  குறள்  கூறும்  உயர்  பண்பாடு  

ஒலிக்கின்ற  சிலம்பும்  மேகலையும்  சிந்தாமணியுடனே  

வளையாபதி  குண்டலகேசியும்  ஆ ஆ ... 

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழி, செம்மொழி, தமிழ் மொழி ஆ ஆ தமிழ் மொழியாம்.. 

கம்ப  நாட்டாழ்வாரும்  கவி  அரசி அவ்வை  நல்லாளும்

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எத்தனையோ  ஆயிரம்  கவிதை  நெய்வோர்  தரும்  

புத்தாடை  அனைத்துக்கும்  வித்தாக  விளங்கும்  மொழி

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஆஆஅ  அகம்  என்றும்  புறம்  என்றும்  

வாழ்வை  அழகாக  வகுத்து  அளித்து , 
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி..

ஓதி வளரும் உயிரான உலக மொழி. 
ஓதி வளரும் உயிரான உலக மொழி.
நம்மொழி, நம்மொழி.. அதுவே..

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
தமிழ் மொழி, தமிழ் மொழி, தமிழ் மொழியாம் ...
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்    
 செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

பாடல் : கலைஞர் கருணாநிதி.
இசை : ஏ.ஆர்.இரகுமான்.
இயக்கம் : கௌதம் வாசுதேவன்.

சிறந்த தரத்தில் தமிழ்ச் செம்மொழிப்  பாடலை, அதன் வரிகளுடன் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்...
தமிழின் பெருமை பலரைச் சென்றடைய, சிறந்த கருத்துகளை பதிவு செய்து உதவுங்கள்...
 
இப்படிக்கு உங்கள் பாசமுள்ள,
மணிபாரதி.

Monday, June 21, 2010

காதலிக்கு கல்யாணம் -காதல் தோல்வி கவிதை - Love Failure kavithai

காதலிக்கு கல்யாணம் 
காதல் தோல்வி சோகக் கவிதை 
சிரிக்க சிரிக்க பார்த்த முகம் - நெஞ்சில் 
சிலையாக பதிந்த முகம்

கயல்கள் இரண்டை பூட்டிய முகம் - என் 
நித்திரையை களைத்த முகம்
அவள் அன்பினிலே திங்கள் முகம் - உண்மையில் 
இதையத்தில் மலர்ந்த பூ-முகம்
வண்டுகளை  காணா சிவந்த முகம் - கண் 
இமைக்குள் நிறைந்த வண்ண முகம் 

பாரதி கண்ட புதுமை முகம் - வேண்டி 
காத்திருந்த கன்னி முகம்

இன்று  

கண்ணீர் சிந்துகிறதோ !

வலையில் துடிக்கிறதோ !

மேடையில் கசங்குகிறதோ !

நாணம் மறைகிறதோ !

உதிரம் கொட்டுகிறதோ !
என் காதலிக்கு கல்யாணம் .

இப்படிக்கு 
கள்வன் காதலன்.

Keywords Cloud : Love kaithai, Love Failure Kavithai, Love Poem, Non-Vetri Love Poem, Kathal Soga Kavithai, Tamil Love Failure Kavithai

Sunday, June 20, 2010

கவிதை... கவித... கவுஜ...

கவிதை எனக்கு அறிமுகமானது சின்ன வயசுலயே. புத்தகம் வாசிக்கறப் பழக்கம் இருந்தா சீக்கிரம் எதையும் கிரகிச்சிக்கற திறமை வரும்னு வீட்டுல என்னை சின்ன வயசுல இருந்து சிறுவர்மலர் குடுத்துப் படிக்க சொல்லுவாங்க. அதுக்கும் இவ்வளவு நேரத்துக்குள்ளப் படிக்கணும்னு deadline வேற(என்ன கொடுமை சார் இது???) அப்போ புத்தகம் படிக்க ஆரம்பிச்சப் பழக்கம்தான் இங்க வரைக்கும் கொண்டு வந்து உங்களையெல்லாம் இம்சை பண்ண வச்சிருக்குன்றதுல எனக்கு எந்த டவுட்டும் இல்ல. உங்களுக்கு??? :)))

ஆங்... மறந்துட்டேன். கவிதைப் பத்திப் பேச ஆரம்பிச்சோம் இல்ல. சின்ன வயசுல சிறுவர்மலர்ல கவிதைகள் எல்லாம் படிச்சிருக்கேன். அப்போ எல்லாம் நம்மள மாதிரி மக்கள்ஸ் எழுதறதுதானு எனக்குத் தெரியாது. அதுக்காகவே பிறந்து வளர்ந்தவங்க எழுதறாங்கன்னு நினைச்சுக்குவேன். புள்ளைக்கு இவ்ளோ திறமை இருக்குனு எங்கம்மா அப்பாவுக்கு அப்போத் தெரியலை. இல்லைனா அப்போ இருந்தே எழுதி ஒரு பெரிய கவிஞர் ஆகி இருப்பேனாக்கும். தமிழ் கூறும் நல்லுலகம் எங்கம்மா அப்பவோட அறியாமையால ஒரு நல்ல அறிவாளிக் கவிஞரை மிஸ் பண்ணிடுச்சு :(((

அப்படியே சிறுவர்மலர்ல இருந்து வீட்டுக்குத் தெரியாம வாரமலர் படிக்க ஆரம்பிச்சு அதுலயும் கவிதைகள் புரியாட்டியும் ரசிச்சுட்டு இருந்த நான் பத்தாவது படிச்சப்போ JCsல இருந்து வந்து ஏதோ லீடர்ஷிப் க்ளாஸ் எல்லாம் எடுத்தாங்க. அப்போ ஒரு நாள் கவிதைப் போட்டி வச்சாங்க. மலை/மழை பத்தி கவிதை எழுதி தரணும். நானும் எங்கயாவது படிச்சோமான்னு யோசி யோசின்னு யோசிச்சேன். ஞாபகம் வந்தா அப்படியே எழுதிக் கொடுத்துடலாம்னு தான். அன்னைக்குனு பாத்து நம்ம குருவி மூளைக்கு எதுமே எட்டலை :(((

அதுல மொதல் பரிசு என் தோழி ஒருத்தி வாங்கினா. அந்த வயசுலயே ரொம்ப நல்லா எழுதி இருந்தா. ஆனா ரொம்ப நாளா அவ எங்கேயோ படிச்ச கவிதைய நல்லா ஞாபகம் வச்சு எழுதிட்டானுதான் நினைச்சுட்டு இருந்தேன். ஹி... ஹி... நம்மளைப் போலவேதான எல்லாரையும் நினைக்கத் தோணுது ;))) அன்னைக்கு வீட்டுக்குப் போனதும் எங்கம்மாட்ட இதுப் பத்தி சொல்லி எனக்கு மட்டும் எழுத வர மாட்டென்றதுனு ஃபீல் பண்ணிட்டு இருந்தப்போதான் அம்மாவுக்குப் புரிஞ்சதுப் போல புள்ளைக்கு இருக்கற திறமை. அப்போ சொன்னாங்க. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது. எடுத்ததுமே எழுத வராது. எழுத எழுததான் நல்லா ப்ராக்டிஸ் ஆகும். அதுக்கு நிறைய கவிதை புக்ஸ் படிக்கணும். சுத்தி நடக்கறத அப்சர்வ் பண்ணனும். அதை வச்சு கவிதை எழுதணும்னு ஒரே அட்வைஸ்.

அப்போதான் எனக்குள்ள இருந்த கவிதாயினி கண்ணு முழிச்சா. உடனே வேகமா நோட்ட எடுத்துட்டு உக்காந்துக்கிட்டேன். வேற எதுக்கு? சுத்தி நடக்கரத அப்சர்வ் பண்ணத்தான். நோட்டு தேடிப் பிடிச்சு எழுதறதுக்குள்ள மறந்துப் போயிட்டா. அதான் முன்னெச்செரிக்கையா நோட்டும் கையுமா உக்காந்தாச்சு. நானும் சுத்திப் பாக்கறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேன்றது. செவுத்துல பல்லி ஒண்ணுதான் நடந்துச்சு. ச்சே! என்ன கொடுமைடா சாமினு வீட்டுக்கு வெளில சேர் போட்டு உக்காந்து எதாவது நடக்குதான்னு பார்த்தேன். ரொம்ப நேரம் கழிச்சு ரெண்டு எருமை மாடுதான் நடந்துப் போச்சு. நான் கவிதை எழுதறேன்னு பொறாமைலதான் எதுமே நடக்க மாட்டென்றதுனு எனக்கு வந்ததே கோபம். என்ன வாழ்க்கை இது? எதிர்பார்த்ததே நடக்க மாட்டேன்றது-ன்னு சலிச்சுட்டப்பதான் எனக்கு பொறித் தட்டுச்சு. வாழ்க்கை!!!! இதைப் பத்தி ஏன் கவிதை எழுதக் கூடாதுனு எனக்குள்ள ஒரு பல்பு எரிஞ்சது. உடனே உக்காந்து பயங்கரமா யோசிச்சு என் வாழ்க்கையோட சில மணி நேரங்களை மோட்டுவளையப் பாத்தே செலவிட்டு நான் மொத மொத எழுதின அரும் பெரும் கவிதை

"வாழ்க்கை சர்க்கரையாய்
இனிக்க வேண்டும்
ஆனால்
சர்க்கரை நோயாய்
மாறி விடக் கூடாது"

ஹி... ஹி... எப்படி ஒரு அரும் பெரும் தத்துவத்த அஞ்சு வரில சொல்லிட்டேனு பெருமையா எங்கம்மாட்ட தூக்கிட்டுப் போய் காட்டினேன். எங்கம்மாவுக்கு அதைப் பாத்ததும் சிரிப்பு வந்துடுச்சு. அப்போ ஒரு கவிஞரைப் பெத்த பெருமைல சிரிக்கறாங்கனு நினைச்சுக்கிட்டேன். இப்போதான் தெரியுது :((( அப்போ சொன்னாங்க எதாவது மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கணும். இல்ல வர்ணனையா இருக்கணும். அது சந்தோஷமா இருக்கலாம். இல்ல துக்கமாவும் இருக்கலாம். அந்த மாதிரி எழுத ட்ரை பண்ணுனு சொன்னாங்க. என் கவிதை சூப்பரா இருக்குனு சொல்லலையேனு ஒரே கோபம். அதுக்கப்புறம் பத்தாவதுல கவிதை எழுத ட்ரை பண்ணவே இல்ல. பதினொண்ணாவது ஹாஸ்டல்ல போய் தள்ளினதும்தான் வீட்டைப் பிரிஞ்ச துக்கத்துல கவிதையா உள்ளுக்குள்ள ஊறுச்சு. அம்மாவுக்கு அப்பாவுக்குன்னு கவிதையா எழுதி தள்ளினேன். எங்க செட்டுலயே நான் தான் பெரிய கவிஞர்னு பேரெடுத்தேன்னா பாத்துக்கங்களேன். அப்புறம் பன்னிரெண்டாவது முடிக்கப் போறப்போ எங்க பிரிவுக்காக எழுதின கவிதைதான் எனக்கு பேர் வாங்கித் தந்துச்சு.

"எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த
நாம் இங்கே
பள்ளியென்னும் தூணில்
நட்பென்னும் கயிற்றால்
ஒன்றாய் பிணைக்கப்பட்டுள்ளோம்
புறத்தில் வேறுபட்டாலும்
அகத்தில் ஒன்றாகி
நட்பு வானில்
சிறகடித்திருக்கும் இவ்வேளையில்
பிரிவென்னும் வேடன்
நம்மைப் பிரிப்பதேனோ...
என்ன செய்ய?
காலமென்னும் கூட்டில்
அடைந்துதானே ஆகவேண்டும்"

இன்னும் கொஞ்சம் நல்லாவே இருந்துச்சு. எனக்கு சில வார்த்தைகள் மறந்துப் போயிடுச்சு. அந்த வயசுல்ல இது ரொம்ப பெரிய இலக்கிய கவிதை ரேஞ்சுக்குத் தெரிஞ்சது. அப்புறம் காலேஜ் சேந்ததுக்கப்புறம் இப்படிதான் தத்துப் பித்துனு எதாவது எழுதிட்டு இருப்பேன். ஒருநாள் எங்க தமிழ் சார் கவிதைப் பத்தி எடுக்கும்போது ஒரு கேள்விக் கேட்டார்.

"மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?"-ன்னுக் கேட்டார்.

நிறையப் பேர் நிறைய பதில் சொன்னாங்க. நான் சொன்னேன் "எல்லாருக்கும் ஐ மீன் படிக்காதவங்களுக்குக் கூட ஈஸியாப் புரியற மாதிரி எழுதறது புதுக் கவிதை. மரபுக் கவிதைன்னா தமிழ் புலமை நல்லா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் புரியும்"-னு. உடனே அவர்

"கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது- இது உங்களுக்கு புரியுதா?"-ன்னார். நான் ஆமாம்னு தலையாட்டினேன்.

"சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தப்போ பாமர மக்களுக்கும் புரியணும்னு நாமக்கல் கவிஞர் எழுதின இது சுத்தமான மரபுக் கவிதை"-னு சொன்னார். அதுக்கு மேல யோசிக்க விருப்பப்படாம அமைதியா உக்காந்துக்கிட்டேன். அப்போ அவர் கொடுத்த விளக்கம்

"தமிழ் கவிதைக்கான சுத்தமான இலக்கணத்தோட எழுதப்படறதுதான் மரபுக் கவிதை. எந்தவித இலக்கணங்களுக்கும் உட்படாம எழுதறது புதுக் கவிதை. இது யார் வேணும்னாலும் எழுதலாம். எப்படி வேணும்னாலும் எழுதி அதை கவிதைனு சொல்லிக்கலாம்"-னு அவர் சொன்னப்போதான் புதுக் கவிதைக்கான இலக்கணமே எனக்குப் புரிஞ்சது. ஹைய்யா! அப்போ நான் எழுதறதும் கவிதைதான் அன்னைக்கு மனசுல ஊன்றிய விதை இன்று மரமாக வளர்ந்து உங்கள் முன் அப்பப்போ வந்து பூப்பூத்துட்டு இருக்கு :)))

நான் எழுதறது கவிதை இல்ல கவுஜன்னு சிலர் சொல்லி இருக்காங்க. யார் என்ன சொன்னாலும் எனக்கு தோணுவதை மட்டுமே செய்யும் நான் என்னுடையவை கவிதைகள் என்றே இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆஹா! தமிழ் நல்லாவே வருது :P

என் டீம்மேட் ஒரு பையன் ஒருநாள் காலைல நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன். எப்படி இருக்குனு சொல்லுனு சொன்னான். சரி சொல்லுனு சொன்னதுக்கு கிடைச்சக் கவிதை

"தலைக் கட்டாமலிருந்தால்
கொத்துமாம் பாம்பு!
உண்மைதான்...
உனது விழிகளும்
இமைகளால் கட்டப்படாமல்
இருந்தன"

எனக்கு இது ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. சும்மா இருக்க மாட்டாம சூப்பரா எழுதி இருக்கனு அவனப் புகழப் போயி அவன் "நான் முன்னாடியெல்லாம் சூப்பரா எழுதுவேன் தெரியுமா. காலேஜ் போய் தான் வேஸ்ட்டாப் போயிட்டேன். கவிதைக் கூட சும்மா திட்டற மாதிரியே வருது like
சட்டில சுடணும் தோசை
உனக்கு வைக்கப் போறேன் பூசை
ஏய் டண்டனக்கா டணக்குணக்கா"-ன்னு TR ஸ்டைல்ல சொன்னான். என்னால சிரிப்பு அடக்க முடியலை. சரி ஒரு கவிதை எழுதிக் குடுனு நான் கேட்டுக்கிட்டதுக்காக அவன் எழுதித் தந்தக் கவிதை இங்க... இதுல மொதல்ல 'சை'ன்னு முடியற மாதிரி வார்த்தைகள் தேடிப் பிடிச்சு அடுத்தடுத்த வரில எழுதிட்டு அப்புறமா முன்னாடி இருக்கற வார்த்தைகள் எழுதினான்.

"மனசுக்குள்ள ஆசை
நடத்தவேணும் பூசை
சம்பாதிக்கல காசை
நமக்கெதுக்கு மீசை
சட்டில கிடக்குது தோசை
தின்னுப்புட்டு தூங்குடா சூசை"

அவனோட இந்தக் கவிதைய எழுதறதுக்கு முன்னாடியே என் ப்ளாக்ல போடறதா தெரியாத்தனமா ப்ராமிஸ் பண்ணிக் கொடுத்துட்டேன். அதான்....... :)))

Bharathiar History


Bharathiar was born on December 11, 1882 in Ettayapuram, which is now part of Thoothukudi District.  Bharathiar was educated at a local high school where his talents as a poet were recognized even at the age of 11.   He had voracious appetite for learning ancient and contemporary Tamil literature and had gifted intellect to derive astonishing truths from ancient poems.
At the age of 22, he became a Tamil teacher at Setupati High School in Madurai and the same year he was appointed as Assistant Editor of a daily newspaper called "Swadesamitran".   In 1906, he was editor of a weekly magazine called "India".
By 1912, Bharathiar was already a legend in South India and his political meetings were attracting multitudes of young patriots, ready to join the non-violent movement for attaining freedom from the British rule.
Bharathiar died on September 11, 1921, at the young age of 39.
The legacy of the poet however endures forever.

 

செம்மொழித்தமிழ்



HEADING
1. செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.

2. தமிழ் எனுஞ் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.

3. செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.

4. செந்தமிழ் எனுஞ் சொல்  உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது.  செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது.  மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.

5. செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.

6. தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து. வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும்.  ஆங்கிலம் இலத்தின் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமற்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது  ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது.  இது, முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.

7. தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே   ஆம் என்பது உறுதி.  இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிபு.

8. பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிபு.

9. தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.  அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிபு.

10. ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனல்  நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.

11. தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்க்லைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று முடிபு இயற்றியுள்ளன.

இணையதளத்தில் வேலை

Work from Home/Online Job: Easy Online Part time jobs. Just spend 1-2 hours/day and Earn Min Rs.35,000/Month. Google Adsense Jobs Powered By TOP Online MNC Company Google.Com. Just Copy Paste Work Only. Sample Job ID Blog: www.chennaionlinejobs.in . If you need Google Adsense Publisher Job ID Blog site? Cost Rs.1000 Only. Contact Me...me@manibharathi.com Mobile:91-09380083338 Tamil Nadu & Whole India. ///// Google Adsense Approval Tricks! Contact Me.////

தமிழ் நடிகைகள் படங்கள்

 

என்னைப் பத்தி ஹி...

My photo
சென்னை, தமிழ்நாடு, India
என்னை பத்தி நானே என்னன்னு சொல்றது??? நீங்க தான் சொல்லணும் நம்ம அருமை பெருமையெல்லாம்!!!

இணைப்பில் இருக்கும் நபர்கள்




பிடித்ததில் படித்து !!!

ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

EllameyTamil.Com Copyright © 2010 Designed by Manibharathi Powered by Hosting Palace