Online Live Girls

Showing posts with label தமிழ்ச் செம்மொழி. Show all posts
Showing posts with label தமிழ்ச் செம்மொழி. Show all posts

Friday, June 25, 2010

டாட் காம் என்ற வார்த்தைக்கு தமிழில் சரியான வார்த்தை இல்லை: செம்மொழி சிவத்தம்பி

இந்திய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் உலகத்தமிழ்செம்மொழி மாநாட்டை தொடங்கிவைத்தார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். முனைவர்வா.செ.குழந்தைசாமி, அமெரிக்க நாட்டு பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இலங்கை நாட்டு பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பேராசிரியர் சிவத்தம்பி வாழ்த்துரை வழங்கும் போது, ’உலகம் முழுவதும் பரவியிருக்கிறது தமிழ். இது உலக மொழியாக,செம்மொழியாக பரவியிருக்கிறது.

இந்த சமயத்தில் முதல்வர் கருணாநிதியை நான் கேட்டுக் கொள்கிறேன், வெளியில் வாழும் தமிழர்கள், தமிழ் மீது பற்று கொண்ட தமிழரல்லாதோர் என அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கும், போதிக்கும் நூல் ஒன்றைக் கொண்டு வர முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது, அவசியமானது.

தமிழை மேம்படுத்த நாம் இன்னும் வெகு தூரம் போக வேண்டும். உதாரணத்திற்கு டாட் காம் என்ற வார்த்தைக்கு தமிழில் சரியான வார்த்தை இல்லை. அதை நாம் உருவாக்க வேண்டும்.

சங்கத் தமிழ் இலக்கியம் சமயச் சார்பற்ற இலக்கியம். யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று போதித்தவர்கள் தமிழர்கள் என்றார்.

பதிவுலக நண்பர்கள் இந்த வார்த்தையை தமிழ்ப்படுத்த முயற்சிக்கலாமே.

SemMozhi |Tamil Anthem |AR.Rahman | [HD] தமிழ் செம்மொழி - tamil semmozhi

SemMozhi |Tamil Anthem |AR.Rahman | [HD]


தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. உலகின் மிகச்சிறப்பான மொழிகளில் ஒன்று திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உலக புகழ் பெற்றது உலகின் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. திருக்குறள் ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த நூலாகும். கம்பராமாயணம், சிலப்பதிகாரம், போன்ற படைப்புகள் தமிழுக்கு பெருமை செர்ப்பனவையாகும். கோவையில் நடைபெறும் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு உலகின் 49 நாடுகளிலிருந்து அறிஞர்களும், புலவர்களும் கலந்து கொள்கிறார்கள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் நடத்தப்படும் இந்த மாநாடு அனைவருக்கும் பெருமை சேர்ப்பவையாக இருக்கிறது. google, yahoo போன்ற வலை தளங்கள் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல தமிழ் சர்வர்களையும், படைப்புகளையும் கொடுத்து வருகிறது. தமிழ் மொழி கண்டிப்பாக ஒரு நாள் உலக அளவில் மிக பிரபலமாக மாறிவிடும்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு ( World Tamil Semmozhi Manadu )

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற தலைப்பில், கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் கவியரங்கம் நடந்தது.
 மாநாட்டு பந்தலில் நடந்த 'போர்வாளும் பூவிதமும்' நாட்டிய நாடக நிகழ்ச்சி பத்பூஷன் டாக்டர் பத்மா சுப்ரமணியம் நடத்தினார். இதில் நடனக் கலைஞர் வினித் ஆடினார்.
 கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக "மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்' சார்பில் வந்துள்ள தமிழ் அறிஞர்கள்.

Wednesday, June 23, 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடு (Ulaga Tamil Semmozhi Manadu)

உலக தமிழ் செம்மொழி மாநாடு இன்று அதாவுது ஜூன் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற விருக்கிறது .அதற்காக சுமார் 50 ,000 ஆயிரம் பேர் அமர கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது .அது மட்டுமில்லாமல் 30 ,000 ஆயிரம் பேர் தரையில் அமர்ந்தும் காணலாம் .இந்த 5 நாள் விழாவிற்கு மொத்தமாக முண்ணூறு கோடி ருபாய் செலவு செயப்பட்டுள்ளது .

400 சிறப்பு பேருந்துகளும் 3 சிறப்பு ரயில்களும் இதற்காக விடப்பட்டன அத்தனையிலும் பயண சீட்டு விற்று திறந்தது குறிப்பிடத்தக்கது .

World classical tamil confrence was being held in tomorrow that is 23rd june to 27 th of june 2010 in coimbatore.for this they are making a seating arrangement of in the main hall is around 50,000 and there is also a provision for additional 30,000 people to sit down on the ground to watch.For this 5 days of confrence they spend around the expense of 300 crores.400 special buses and three special trains for people around TN and neighbouring states to attend the meet. But all the tickets are booked for this conference.

செம்மொழியா... செவ்வியல் மொழியா?: மணவை முஸ்தபா ( How The Name Semmozhi Came For Tamil )


தமிழை செம்மொழி என்பதா அல்லது செவ்வியல் மொழி என்று அழைப்பதா என்ற குழப்பம் சமீபகாலமாக நீடித்து வந்தது. சங்க இலக்கியம்,தொல்காப்பிய இலக்கணம் முதலாக மொழி ஞாயிறு பாவணர் வரை அனைவருமே தமிழை செம்மொழி என்றே அழைத்து வந்துள்ளனர். "செம்மையாய் அமைந்த மொழி' என்பது அதன் பொருளாகும்.
கிளாசிக்கல் எனும் ஆங்கில வார்த்தையை அப்படியே மொழி பெயர்க்கும் போது, செவ்வியல் என்று மொழி பெயர்க்கிறார்கள். கிளாசிக்கல் லிட்டரேச்சர் என்பதை செவ்வியல் இலக்கியம் என்று மொழி என்று மொழி பெயர்க்கலாம். ஆனால் செவ்வியல் மொழி என்றால் புதுவகை இயல் மொழி என்றே எண்ணத் தோன்றும். ஆனால் செம்மொழியில் உள்ள செம் என்பது செம்மை என்பதன் சுருக்கமாகும். செம்மையாய் அமைந்த மொழி என்று பொருள். இதனால்தான் கிளாசிக்கல் லாங்குவேஜ் என்பதை செம்மொழி என்று கூறுவதே பொருத்தம்.

தமிழ் வளர்த்த நூறு தமிழ் அறிஞர்கள் ( 100 Tamil Experts In Tamilnadu )

  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ரா.இளங்குமரனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ஞானசம்பந்தனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ராமநாதன் செட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சித்பவானந்தர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஏந்தல் மங்கலங்கிழார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சிவஞான பாலைய அடிகளார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்.. கா.பொ.ரத்தினம்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.வரதராசனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ..சி.இலக்குவனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... : அ.சிதம்பரநாதனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...தமிழ்க்கடல் ராய.செசாக்கலிங்கனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
  • மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால் பிள்ளை (1896 - 1985)
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பண்டிதர் அருணகிரிநாதர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ந.சி.கந்தையாபிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...திரிசிரபுரம் ரா.பஞ்சநதம்பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்..பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் சொ.முருகப்பா
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ...பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சதாசிவப் பண்டாரத்தார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...பேராசிரியர் மயிலை சிவமுத்து
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சாமி சிதம்பரனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ... ஞா.தேவநேயப் பாவாணர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கி.ஆ.பெ.விசுவநாதனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...அண்ணாமலை செட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...கோவிந்தசாமி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...பாண்டித்துரைத் தேவர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கா. சுப்பிரமணியபிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வேங்கடசாமி நாட்டார்
  • தமிழ்வளர்த்த அறிஞர்கள்... உமாமகேசுவரன் பிள்ளை
  • செல்வ கேசவராய முதலியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தண்டபாணி தேசிகர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்..: தணிகை மணி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பா.வே.மாணிக்க நாயக்கர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பூரணலிங்கம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சுவாமி ஞானப்பிரகாசர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்: மயிலை சீனி வேங்டசாமி
  • செம்மொழி தமிழ் அறிஞர்கள்-சுத்தானந்த பாரதியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாமிநாத சர்மா
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் கந்தையாபிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ...:சுவாமி விபுலானந்தர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆர்.கே.சண்முகம் செட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...பெ.நா.அப்புஸ்வாமி
  • தமிழ் வளர்த்த அறிஞர் பொ.திருகூட சுந்தரம் பிள்ளை
  • பாவேந்தர் பாரதிதாசன்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் : சுத்தானந்த பாரதியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் :பாபநாசம் சிவன்
  • அறிஞர் வ.ரா.,
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ராமலிங்கம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... திரு.வி.க.,
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மகாகவி பாரதியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்...வ.வே.சு. ஐயர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... நாவலர் சோமசுந்தர பாரதியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள் ... ராஜாஜி
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாயுபு மரைக்காயர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.ராகவையங்கார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மறைமலை அடிகள்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... தேசிக விநாயகம் பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பம்மல் சம்பந்த முதலியார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.உ.சிதம்பரனார்
  • நா.கதிரைவேற்பிள்ளை
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாம்பன் சுவாமிகள்
  • பரிதிமாற் கலைஞர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சங்கரதாஸ் சுவாமிகள்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... உ.வே.சா.,
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறுமுக நாவலர்
  • தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வீரமாமுனிவர்
  • அறிவோம்... வேதங்களிலும் தமிழ்
  • அறிவோம்... மாதவ சிவஞான முனிவர்
  • ஆய்வுக்கு 30 அரங்கம்
  • அறிவோம்... உயர்தனிச் செம்மொழி
  • அறிவோம்... அறிஞர் கால்டுவெல்

ஒலிப்பேழை ( Tamil Semmozhi All Song Free Download )

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி ? ( How The Tamil Will Got A Semmozhi )


கோவை : "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டுமென ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஒலித்து வந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்று போயிற்று. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபின், தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று தமிழ் செம்மொழியென அறிவிக்கப்பட்டது,'' என்று, கோவையில் துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

மாநாட்டுக்கு தலைமை வகித்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாக இம்மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். கோவையில் நடைபெறுகின்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமென தமிழர்கள் வந்துள்ளனர். கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதை பெருமையாகக் கருதுகிறேன். இதுவரை, "உலகத் தமிழ் மாநாடு' என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடந்துள்ளன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்போது நடக்கும் மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை, "உலகத் தமிழ் மாநாடுகள்'. இப்போது நடைபெறுவது, "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு'. உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில், உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை. தமிழ் உலகமொழி மட்டுமல்ல; உலகமொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், "ஞால முதல்மொழி தமிழே' என்று, நிறுவிக் காட்டியிருக்கிறார்.

மூலத் தாய்மொழிச் சொற்கள் உலகமொழிகளில் சொல்வடிவில் உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உலகமொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப்பெயர்கள்; நான், நீ, அவன் எனும் மூவிடப்பெயர்கள். நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கை பெயர்கள் போன்றவை, தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால், தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது. உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலை தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என, அறியலாம். கி.மு. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் சாலமனுக்கு, தமிழக கப்பல்கள் மயில் தோகையையும், யானை தந்தங்களையும், வாசனைப் பொருட்களையும் கொண்டு சென்றன. வடமொழியில், வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை, ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார். இதிலிருந்து, வடமொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை, அறியலாம். வால்மீகி ராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட முவேந்தர்களை பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது, லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக்கருதப்படுகிறது. கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மவுரியரின் அமைச்சரான சாணக்கியர், தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலை பற்றி குறிப்பிடுகின்றார். கி.மு. 350ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞர் காத்தியனார் சேர, சோழ, பாண்டியர்களை பற்றி குறிப்பிடுகிறார்.

பாரதப்போர் பற்றிய குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன் 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது, இரு பக்க படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன் - சேரன் பெருஞ்சோற்றுதியன், சேரலாதன் என்று அழைக்கப்பட்டார். பாரதப்போர் நடைபெற்ற காலம் கி.மு. 1500 எனப்படுகிறது. அப்படியானால், இந்த சேரனின் காலம் கி.மு. 1500 ஆக இருக்க வேண்டும். இவையனைத்தும் தமிழ் இனம், தமிழ் மொழியின் தொன்மையையும் புலப்படுத்துகின்றன. பேரறிஞர்களான ஜான்மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்ட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர், "திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள்' எனவும், அவர்களின் மொழி திராவிட மொழி தான் எனவும் உறுதிப்படுத்துகின்றனர். "சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு; திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்துவெளிக் குறியீடுகளை பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்' என்று, கடந்த 40 ஆண்டுகளாக சிந்துவெளி பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார். இன்று, "கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' பெறும் பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா, "சிந்துவெளி பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை' என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன் வைத்து, அத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிந்துவெளியினர் திராவிடமொழி பேசுபவர்களே, என்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் அவர் விரிவாக கூறியிருக்கிறார். அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்கள் தரை, கடல் வழியாக பயணம் செய்து உஜ்ஜயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்றும் வாணிகம் செய்தார்கள். தமிழக வாணிகர், அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்தார்கள். அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளை பேசிய மக்கள் தங்கியிருந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழ்நாட்டுக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேர நாட்டின் முசிறித்துறைமுகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகள் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாயிற்று. அதன் தொன்மை, தனித்தன்மை, முதன்மைச் சிறப்பினால் தமிழ், உலக முதல் தாய்மொழியாக, உலகத்தமிழாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மொழி, செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத் தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும். இந்த பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

தமிழ், செம்மொழியே என, முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர். தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல். அயர்லாந்து நாட்டில் "ஷெப்பர்ட்ஸ் காலனி' என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார். தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னை பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலை கழகங்களும் குரல் கொடுத்தன. தவிர, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், வா.செ. குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார்சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர். எனினும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்றுப் போயிற்று. ஆனால், சோனியாவின் வழிகாட்டுதலிலும், பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த பின்னர்தான், தமிழைச் செம்மொழியென பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடந்த 2004, அக்.,12ல் தமிழ் செம்மொழி பிரகடன அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

ஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல், குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்கு பிறகு, நடைபெறுகிற முதல் மாநாடு இது. இதனால்தான் தமிழின் பெயரால், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில், இந்த மாநாடு கோவை மாநகரில் நடைபெறுகிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ்மொழியை, எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்கவும்; இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும்; சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல்லூர் கொடுங்கல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிகளின் அடிப்படையில், மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அதன் காரணமாகவே, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படுகிறது. இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் World Tamil Semmozhi

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை இன்று காலை 10.30 மணி அளவில் செம்மொழி மாநாட்டு இலச்சினையை திறந்து மாநாட்டை துவக்கி வைத்தார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் இன்று துவங்கியது. மாநாட்டை பார்ப்பதற்காக "கொடீசியா' அரங்கை நோக்கி கடலென திரண்டு வரும் மக்கள் கூட்டம்.

Tamil Semmozhi Manadu 2010 Starting

மாநாட்டு கோலாகலம் கோவையில் பிரமிப்பு


செம்மொழி மாநாடு திருவிழா துவக்கம்


உலகத்தமிழ் செம்மொழி திடீர் மாநாட்டு சுற்றுலா தலமான மாநாட்டு வளாகம்


உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவையில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு ஏற்பாடுகளைக் காண பொதுமக்கள் குவிவதால், கொடிசியா வளாகம் திடீர் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, 22ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் 2,200 மாணவர்கள் அமர்ந்து திருவள்ளுவரின் பிரமாண்ட உருவத்தை தோற்றுவித்த நிகழ்ச்சி, சென்னையிலுள்ள எவர்வின் பள்ளியில் நடந்தது
.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இடம்பெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, மாற்றப்பட்ட கோயம்புத்தூர் ரயில் நிலையம்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவை ரயில்வே ஸ்டேஷன் சீரமைக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 22, 2010

தமிழ்ச் செம்மொழி பாடல், வரிகளுடன்...



[ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.]
 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறந்த பின்னர் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

உண்பது  நாழி   உடுப்பது  இரண்டே  

உறைவிடம்  என்பது  ஒன்றே  என,

உரைத்து  வாழ்ந்தோம்.  உழைத்து  வாழ்வோம்

தீதும்  நன்றும்  பிறர்  தர  வாரா  எனும்

நன்  மொழியே  நம்  பொன்  மொழியாம்  

போரைப் புறம்  தள்ளி  பொருளை  பொது  வாக்கவே  

அமைதி  வழி  காட்டும்  அன்பு  மொழி

அய்யன்  வள்ளுவரின்  வாய்  மொழியாம்

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பை  பகுத்து  கூறும் 
  
ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பைப்  பகுத்து  கூறும் 

ஒல்காப்  புகழ்த்  தொல்காப்பியமும்,  ஒப்பற்ற  குறள்  கூறும்  உயர்  பண்பாடு  

ஒலிக்கின்ற  சிலம்பும்  மேகலையும்  சிந்தாமணியுடனே  

வளையாபதி  குண்டலகேசியும்  ஆ ஆ ... 

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழி, செம்மொழி, தமிழ் மொழி ஆ ஆ தமிழ் மொழியாம்.. 

கம்ப  நாட்டாழ்வாரும்  கவி  அரசி அவ்வை  நல்லாளும்

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எத்தனையோ  ஆயிரம்  கவிதை  நெய்வோர்  தரும்  

புத்தாடை  அனைத்துக்கும்  வித்தாக  விளங்கும்  மொழி

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஆஆஅ  அகம்  என்றும்  புறம்  என்றும்  

வாழ்வை  அழகாக  வகுத்து  அளித்து , 
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி..

ஓதி வளரும் உயிரான உலக மொழி. 
ஓதி வளரும் உயிரான உலக மொழி.
நம்மொழி, நம்மொழி.. அதுவே..

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
தமிழ் மொழி, தமிழ் மொழி, தமிழ் மொழியாம் ...
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்    
 செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

பாடல் : கலைஞர் கருணாநிதி.
இசை : ஏ.ஆர்.இரகுமான்.
இயக்கம் : கௌதம் வாசுதேவன்.

சிறந்த தரத்தில் தமிழ்ச் செம்மொழிப்  பாடலை, அதன் வரிகளுடன் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்...
தமிழின் பெருமை பலரைச் சென்றடைய, சிறந்த கருத்துகளை பதிவு செய்து உதவுங்கள்...
 
இப்படிக்கு உங்கள் பாசமுள்ள,
மணிபாரதி.

Monday, June 21, 2010

கணினிவழி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநாட்டில் பரிசு வழங்கப்படும்: அமைச்சர் பூங்கோதை

தமிழ் இணைய மாநாட்டையொட்டி கணினி வழி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை மாநாட்டில் 27 ந் தேதி பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் பூங்கோதை கூறினார்.

அமைச்சர் பூங்கோதை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வருகிற 23 ந் தேதி முதல் 27 ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி 3 நாட்கள் உலக தமிழ் இணைய மாநாடு, உத்தமம் அமைப்புடன் இணைந்து நடைபெற உள்ளது. இளைய தலை முறையினரிடையே தமிழ் இணைய ஈடுபாட்டை வளர்த்திடவும் பொதுமக்களிடையே தமிழ் இணைய வளர்ச்சியையும், பயன்பாடுகளையும் விளக்குவதற்காகவும் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கணினிவழி போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் அனைத்து பள்ளிகளில் இருந்தும் 8 ஆயிரத்து 300 மாணவர்கள் பங்கு பெற்றனர். இப்போட்டிகளில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மொத்தம் 21 மாணவ மாணவியர்கள் வெற்றிபெற்றுள்ளனர். மாவட்ட அளவில் மொத்தம் 189 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான தனி நபர் போட்டியில் செங்கல்பட்டை சேர்ந்த நந்தகுமாரும் என்ற மாணவருக்கு முதல் இடமும், குழுவினருக்கான போட்டியில் மணிகண்டன், பால சுப்பிரமணியன் ஆகியோர் முதல் இடமும் பெற்றுள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் வடிவமைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இணையதளத்தில் நடந்த இந்த போட்டிகளில் சுமார் 1200 தமிழ் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. விக்கிப்பீடியாவை பல பிரிவுகளாக பிரித்து போட்டியை நடத்தினோம். போட்டியில் இடம் பெற்ற கட்டுரைகளில் மாநில அளவில் 9 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலை கலாசார பிரிவில் சென்னை மாணவன் யோகேஷ் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவர்களுக்கான முதல் பரிசு ரூ.7,500 ம், விக்கிப்பீடியா போட்டியில் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் பரிசு பெற்றவர்களுக்கு 27 ந் தேதி காலை கோவையில் நடைபெறும் மாநாட்டில் வழங்கப்படும். இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் என்பது மகிழ்ச்சிக்குறியதாகும் என்றார்.

கோவையில் 500க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள்






 

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக உலகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கோவை நகரம் முழுவதும் விழா கோலமாக காட்சி அளிக்கிறது. மாநாட்டு அரங்கை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு வருகின்றனர். இதற்கிடையில் கோவை மாநாட்டில் பங்கேற்க இன்று முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்றுள்ளார்.
மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் தமிழரிஞர்கள் கோவைக்கு வந்துள்ளனர். மாநாட்டு செய்திகளை உடனுக்குடன் அனுப்ப பல்வேறு நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கோவையில் குவிந்தனர்.
இவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு உடனுக்குடன் செய்திகள், படங்கள், வீடியோ ஆகியவற்றை அனுப்ப, இணையதள இணைப்புகள், கம்யூட்டர்கள் போன்ற ஏற்பாடுகள் 12 ஆயிரம் சதுர அடியில் செய்யப்பட்டுள்ளன.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என தனித்தனியாக 700 கம்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Sunday, June 20, 2010

செம்மொழித்தமிழ்



HEADING
1. செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.

2. தமிழ் எனுஞ் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.

3. செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.

4. செந்தமிழ் எனுஞ் சொல்  உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது.  செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது.  மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.

5. செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.

6. தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து. வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும்.  ஆங்கிலம் இலத்தின் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமற்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது  ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது.  இது, முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.

7. தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே   ஆம் என்பது உறுதி.  இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிபு.

8. பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிபு.

9. தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.  அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிபு.

10. ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனல்  நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.

11. தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்க்லைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று முடிபு இயற்றியுள்ளன.

தமிழ் செம்மொழி வரலாறு


தமிழ்

தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.

வரலாறு


முதன்மைக் கட்டுரை: தமிழ் மொழி வரலாறு

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003).[4] இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.[5] பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.
பதினைந்தாம் நூற்றாண்டிலோ பதினாறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்ட கிறித்தவ சமய வழிபாட்டு ஓலைச் சுவடிகள்


தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

    * சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
    * சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
    * பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
    * மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)
    * இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)

பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.
[தொகு] மொழிக்குடும்ப

மொழிக்குடும்பம்


தமிழ் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kஐகடி, பேட்டா குறும்பா, Sஹொலக மற்றும் Yஎருகுல என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.


தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.
[தொகு]

சொற்பிறப்பு


தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர்.

சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.[6] காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, டமிz < டம்-இz < *டவ்-இz < *டக்-இz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழ் பேசப்படும் இடங்கள்


இதையும் பார்க்க: புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை

 
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.


தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாப்பிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.


மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.


ஆட்சி மொழி அங்கீகாரம்


தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், பாண்டிச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு முகமை மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 525 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.


இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்


இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து  இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்

முதன்மைக் கட்டுரைகள்: பேச்சுத் தமிழ், உரைநடைத் தமிழ்
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட விவிலிய நூலின் முகப்பு

தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (டிக்லொஸ்ஸிஅ) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.


செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. (எடுத்துக்காட்டு, காங்கேயர் (Kஅன்கெயர்), 1840). பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (Sசிஃப்ஃப்மன், 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர்.

வட்டார மொழி வழக்குகள்

முதன்மைக் கட்டுரை: தமிழ் வட்டார மொழி வழக்குகள்

தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே" அல்லது "இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "Pலகெ, ஸிடெ; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல்லே பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்கியதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.


பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் காணப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாஷையின் எச்சம் காணப்படுகிறது. வைணவ பரிபாஷை என்பது ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைணவ சமய மரபுகள் மற்றும் பண்புகளை உள்ளடக்கிய மொழி வழக்காகும்.


தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியை சில சமயங்களில் கணிக்க முடிகிறது.


எத்னொலோக் ஏத்னொலொகுஎ என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.


புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளை கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.

எழுத்துமுறை

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

இலக்கணம்


முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கணம்

இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (மெடலின்குஇஸ்டிக்) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.

தமிழ் இலக்கணம் பெருவாரியாக தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம் மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும். பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.

தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும், பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பால்களாகவும், அஃறிணை ஒன்றன்பால், பலவின் பால் என இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.

தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை எனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப் பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.

சொல் வளம்


தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.


சமஸ்கிருத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. சமயம் சார்பான சமஸ்கிருத சொற்பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிருத உச்சரிப்புக்களைத் தமிழில் உள்வாங்குவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.


தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன. பாரசீக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீசிய, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்த்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன.


பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டில் இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியம். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழியின் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதே நன்று என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்து. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.

கலைச்சொற்கள்


தமிழ் மொழியில் அறிவியலை படைக்க கலைச்சொல்லாக்கம் முக்கியம். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.

இணையதளத்தில் வேலை

Work from Home/Online Job: Easy Online Part time jobs. Just spend 1-2 hours/day and Earn Min Rs.35,000/Month. Google Adsense Jobs Powered By TOP Online MNC Company Google.Com. Just Copy Paste Work Only. Sample Job ID Blog: www.chennaionlinejobs.in . If you need Google Adsense Publisher Job ID Blog site? Cost Rs.1000 Only. Contact Me...me@manibharathi.com Mobile:91-09380083338 Tamil Nadu & Whole India. ///// Google Adsense Approval Tricks! Contact Me.////

தமிழ் நடிகைகள் படங்கள்

 

என்னைப் பத்தி ஹி...

My photo
சென்னை, தமிழ்நாடு, India
என்னை பத்தி நானே என்னன்னு சொல்றது??? நீங்க தான் சொல்லணும் நம்ம அருமை பெருமையெல்லாம்!!!

இணைப்பில் இருக்கும் நபர்கள்




பிடித்ததில் படித்து !!!

ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

EllameyTamil.Com Copyright © 2010 Designed by Manibharathi Powered by Hosting Palace